2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் doenets.lk மற்றும் onlineexams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக அல்லது EXAMS SRILANKA செயலி ஊடாக சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேற்படி பரீட்சைக்காக தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பபடிவங்கள் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஏற்றுகொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் ஒரு விண்ணப்பதாரியினால் ஒரு விண்ணப்ப படிவத்தை மாத்திரமே அனுப்ப முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.