மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்ட லயன் வீடுகள் வரிசையில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மின்னொழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தோட்ட மக்களும், பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாதிப்படைந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.