19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது.
இன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்தத் தொடரில் இலங்கை உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இலங்கை இளையோர் அணி உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது. கோலாலம்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இளையோர் மகளிர் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி பெப்ரவரி 02 ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.