follow the truth

follow the truth

January, 16, 2025
HomeTOP1ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Published on

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக இந்த சந்திப்பில் தூதுவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தற்பொழுதுள்ள புதிய அரசியல் போக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமேரி , கடந்த காலங்களில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சுமார் 150,000 இலங்கையர்கள் பணியாற்றுவதாகவும் எதிர்காலத்தில் இந்த வேலை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் இலங்கை நிபுணர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் காலித் நாசர் அல் ஆமேரி தெரிவித்தார்.

இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தயாராக இருப்பதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பாக புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள விரும்புவதாகவும் தூதர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இது வாய்ப்பாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் – சீனப் பிரதமர்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங்...

இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின்...

மீண்டும் இயங்கும் வாழைச்சேனை காகித தொழிற்சாலை

வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி...