சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 2025 ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 வரையிலும், இரண்டாவது போட்டி பெப்ரவரி 6 முதல் பெப்ரவரி 10 வரையிலும் நடைபெறும்.
இந்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இரண்டு போட்டிகளும் 2025 பெப்ரவரி 12 மற்றும் பெப்ரவரி 14 ஆகிய திகதிகளில் பகல் ஆட்டங்களாக நடைபெறும்.