follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP2பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

Published on

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கியூபா மீது 60 ஆண்டுகளாக பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகின்றது.

இந்நிலையில் டிரம்ப் ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்தபோது, கியூபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் உள்வாங்கியிருந்தார்.

ஈரான், சிரியா, வடகொரியா ஆகிய நாடுகளுடன் கியூபாவும் பயங்கரவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு கியூபா மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்க நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் பதவிக்காலம் முடிவடையவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்த பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் புதிதாக பதவி ஏற்கப் போகும் டிரம்ப் நிர்வாகம் இதை ஏற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரூ.98 மில்லியன் மிச்சப்படுத்திய NPP அரசின் SMS செய்தி – அப்பட்டமான பொய் அது இலவச சேவை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை...

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...