எரிபொருளுக்கான தற்போதைய வரியை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 1, 2024 முதல், பெட்ரோல் லீட்டருக்கு ஜனவரி 01, 2024 முதல் பெட்ரோலுக்கு 72 ரூபாய் ஓட்டோ டீசல் லீட்டருக்கு 50 ரூபாய் மற்றும் சூப்பர் டீசலுக்கு ரூ.57 வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 11ஆம் திகதி முதல் வரிகள் அதே முறையில் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.