follow the truth

follow the truth

January, 12, 2025
Homeஉள்நாடுகடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

Published on

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

டாப் 10 வலிமையான கடவுச்சீட்டு உள்ள நாடுகள்:

1. சிங்கப்பூர் (195 இடங்கள்)
2. ஜப்பான் (193 இடங்கள்)
3. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா (192 இடங்கள்)
4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே (191 இடங்கள்)
5. பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் (190 இடங்கள்)
6. கிரீஸ், ஆஸ்திரேலியா (189 இடங்கள்)
7. கனடா, போலந்து, மால்டா (188 இடங்கள்)
8. ஹங்கேரி, செக்கியா (187 இடங்கள்)
9. எஸ்டோனியா, அமெரிக்கா (186 இடங்கள்)
10. லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185 இடங்கள்)

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு...

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று(11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம்...

புளி தட்டுப்பாடு – ஒரு கிலோ புளி 2000 ரூபா?

சந்தையில் புளிக்குப் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்க...