follow the truth

follow the truth

January, 12, 2025
HomeTOP2ரத்கிந்த மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

ரத்கிந்த மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Published on

உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று(12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.

அதன்படி, தற்போது ஏழு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளது.

அதன்படி, மூன்று வான் கதவுகள் தலா ஒரு மீற்றர் அளவிலும், ஏனைய 3 வான் கதவுகள் தலா 0.5 மீற்றர் அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில மணிநேரங்களில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாற்றமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு...

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று(11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம்...

புளி தட்டுப்பாடு – ஒரு கிலோ புளி 2000 ரூபா?

சந்தையில் புளிக்குப் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்க...