எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு 200 இலிருந்து 300 வீதம் வரை வரி விதிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒருசில வாகனங்களின் எஞ்சின் கொள்ளளவிற்கு அமைய வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.