follow the truth

follow the truth

January, 12, 2025
Homeலைஃப்ஸ்டைல்தினமும் எடையை செக் பண்ணலாமா?

தினமும் எடையை செக் பண்ணலாமா?

Published on

ஒரு மாதத்தில் இத்தனை கிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா… சிலர் ஒரே மாதத்தில் 10- 12 கிலோவெல்லாம் குறைத்ததாகச் சொல்கிறார்களே… அது சரியானதா… தினமும் உடல் எடையை சரிபார்க்கலாமா?

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 2 முதல் 2.5 கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதுதான் இயல்பானதும்கூட. ஆர்வக் கோளாறில் ஒரே மாதத்தில் 10 கிலோ, 12 கிலோ எடையை எல்லாம் குறைக்க முயற்சி செய்வது ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குறுகிய காலத்தில் அளவுக்கதிமான எடைக்குறைப்பு என்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி, தசை இழப்பை ஏற்படுத்தும். தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து, உடல் ஆற்றலையும் குறைக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் ஆரம்பத்தில் ஒருவர் இழப்பதெல்லாம் உடலில் உள்ள தண்ணீரின் எடையைத்தான். அதன் பிறகு அவர் எடுத்துக்கொள்ளும் உணவு, அவற்றின் கலோரி ஆகியவற்றைப் பொறுத்துதான் தசை மற்றும் கொழுப்பு ஆகியவை குறையத் தொடங்கும்.

சில நாள்களில் பாரமான உணவுகளைச் சாப்பிட நேரிடும். அந்த உணவுகளில் உள்ள அதிகமான கார்போஹைட்ரேட் உடலில் நீர் சேர்வதை அதிகரிக்கும். இனிப்புகள், பழங்கள் என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கும். பலமாக உணவு உண்ட அடுத்தநாளே எடையைச் சரிபார்ப்பது தவறு. எடையில் ஏற்பட்ட ஏற்றம் அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் குறையும்.

விசேஷங்கள், விருந்துகள் வரப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தால், உடற்பயிற்சிகளைத் தவறவிடாமல் செய்ய வேண்டியது முக்கியம். வெளியில் சாப்பிடப் போவது தெரிந்தால் அன்றைய தினம் சற்று அதிகம் வொர்க் அவுட் செய்யலாம். அடுத்தவேளை சாப்பிடும்போது ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல்நாள் இரவு பலமான விருந்து சாப்பிட்டிருந்தால், அடுத்த நாள் காலையில் காபியோ, கிரீன் டீயோ குடித்துவிட்டு, காலை உணவைத் தவிர்த்து விடலாம். கொஞ்சமாக சாதம், பருப்பு மற்றும் காய்கறிகளுடன் நேரடியாக மதிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

15 நாள்களுக்கொரு முறை எடை பார்த்தால் போதும். இன்ச் டேப் பயன்படுத்தி மார்பளவு, இடுப்பு, வயிறு மற்றும் தொடைப்பகுதிகளையும் அளந்து பாருங்கள். தினமும் எடையை செக் செய்ய வேண்டியதில்லை. மாதவிலக்கு நாள்களிலும் உடல் எடையில் ஏற்றம் இருக்கலாம் என்பதால் அப்போதும் அதை சரிபார்க்கத் தேவையில்லை.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புகை பிடிப்பதால் மட்டுமல்ல, பச்சைக் குத்துவதாலும் புற்றுநோய் உண்டாகும்

விதவிதமாக பச்சைக் குத்திக் கொள்ளுதல் தற்போது ஒரு பேஷனாகி விட்டது. கை , கால், முதுகு, இடுப்பைத் தாண்டி,...

நுரையீரலில் இருக்கும் நச்சினை போக்கும் 9 ஆரோக்கிய பானங்கள்

உலகம் முழுக்க காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாசுபட்ட காற்றை உள்ளிழுக்கும் போது மனிதர்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை...

பல் சொத்தைக்கு டீ – காபி தான் காரணமா?

வாய்தான் உடலின் நுழைவாயில் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உலக...