அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று(10) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இன்று நள்ளிரவின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை திருப்பியனுப்பப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தனியார் இறக்குமதியாளர்களால் இதுவரை 125,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக தொகை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.