follow the truth

follow the truth

January, 10, 2025
Homeஉலகம்கலிபோர்னியா காட்டுத்தீ - சுமார் 50 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பு

கலிபோர்னியா காட்டுத்தீ – சுமார் 50 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பு

Published on

கலிபோர்னியா காட்டுத்தீயால், சுமார் 50 பில்லியன் டொலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர்.

இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருகின்ற சூழல் காரணமாக, பிரபலங்கள் பலரும் தங்களின் சொந்த வீடுகளை இழந்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமலா ஹாரிஸின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரத்து

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணங்களை இரத்து செய்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது பரவி வரும்...

அமெரிக்காவின் தடையை எதிர்த்து கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகும் டிக் டாக்

டிக் டாக் நிறுவனமானது இன்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவின் டிக்...

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பானுடன் இணைந்த ரஷ்யா

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷ்யா இணைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க...