follow the truth

follow the truth

October, 2, 2024
HomeTOP1எரிபொருள் விலையை அதிகரிக்க நிதி அமைச்சரிடம் கோரிக்கை!

எரிபொருள் விலையை அதிகரிக்க நிதி அமைச்சரிடம் கோரிக்கை!

Published on

இலங்கையில் எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கடிதம் மூலம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும் என நிதி அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலை 35 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலை 24 ரூபாவாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய வங்கி ஆளுநரின் இந்தக் கடிதத்திற்கு நிதி அமைச்சு இதுவரை எவ்வித  பதிலையும் வழங்கவில்லை என தெரியவருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர...

ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த...

டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோர் இன்று...