follow the truth

follow the truth

January, 8, 2025
Homeவிளையாட்டுஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பெட் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பெட் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம்

Published on

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் தவரவிடக்கூடும் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணித்தலைவராக பதவியேற்று நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அவர் முழு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கத் தயாராவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான போர்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 3 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இந்தநிலையில், நேற்றையதினம் இரண்டாவது குழந்தை பிரசவத்துக்காக தமது மனைவியை பெட் கம்மின்ஸ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமையினால் இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்டீவன் ஸ்மித் அவருக்குப் பதிலாக தலைமைப் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதன்படி, போட்டியின்...

Border-Gavaskar கிண்ணம் வழங்கப்பட்டபோது, ​​நான் இந்தியன் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன் – கவாஸ்கர்

மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மூத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் ஆகியோரின்...

இன்னொரு தோல்வியைத் தவிர்க்க, நாளை நாம் வெல்ல வேண்டும்

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது...