follow the truth

follow the truth

January, 8, 2025
HomeTOP1இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டம் : நாளை அமைச்சரவைக்கு

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டம் : நாளை அமைச்சரவைக்கு

Published on

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.

குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியர் ஒருவர் உடனடி பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி...

போலி குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்...

பொதுப் போக்குவரத்தில் அபாயகர உதிரிப்பாகங்கள் அகற்றல் மேலும் தொடரும்

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எதிர்வரும்...