follow the truth

follow the truth

January, 8, 2025
Homeஉள்நாடுவெலிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வெலிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Published on

வெலிகம – கப்பரதோட்டை வள்ளிவல வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துப்பாக்கிகளைக் கையளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுமெனவும் ஏனைய தேவைகளுக்காக தற்போது துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை...

ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை...

சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான...