follow the truth

follow the truth

January, 7, 2025
HomeTOP1கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை உத்தரவு நீடிப்பு

கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை உத்தரவு நீடிப்பு

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வங்கி நிலையான வைப்புக்கள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், மேற்படி உத்தரவை ஏப்ரல் 2ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து மத்திய வங்கி ஆளுநரின் பரிந்துரை

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது கருத்தை விளக்கினார். நேற்றிரவு...

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சபாநாயகர்...

TELL IGP மற்றும் l-need சேவைகள் புதிய வடிவில்

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின்...