follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP1"இனிவரும் காலங்களில் எந்தவொரு வௌி தரப்பினரதும் நிதி அன்பளிப்புகள் எங்களுக்கு தேவையில்லை"

“இனிவரும் காலங்களில் எந்தவொரு வௌி தரப்பினரதும் நிதி அன்பளிப்புகள் எங்களுக்கு தேவையில்லை”

Published on

முக்கோடி தேவர்களை விட அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு மேலதிகமாக நிதியொதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நோயாளர் விடுதி தொகுதியொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்;

“.. ருஹுணு கதிர்காமம் தேவாலய உண்டியலுக்கு பக்தர்கள் செலுத்திய நேர்த்தி மற்றும் காணிக்கைப் பணத்தில் இருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் எந்தவொரு வௌி தரப்பினரதும் நிதி அன்பளிப்புகள் மற்றும் இவ்வாறான செயற்பாடுகளை சுகாதாரத்துறையில் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

அவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் அரசாங்கத்திடம் கையளித்த பின்னர், அதன் மூலம் அரசாங்கத்துக்கு வேண்டாத சுமை ஏற்படுகின்றது. கட்டிடம் இருக்கின்றது, வசதிகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்று பொதுமக்கள் அரசாங்கத்தைத் தான் குறை கூறுவார்கள்.

ருஹுணை கதிர்காம தேவாலயம் மட்டுமன்றி முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களும் ஒன்று சேர்ந்து ஒதுக்கும் நிதியை விட அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு அதிக நிதியையே ஒதுக்கீடு செய்துள்ளது.

இனி வரும் காலங்களிலும் அவ்வாறே நிதியொதுக்கப்படும் எதிர்வரும் 20 ஆண்டுகாலத்தை உத்தேசித்தே எங்களுடைய சுகாதாரக் கொள்கைகள் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும்.

அதன்போது வெளி தரப்பினருடன் தலையீடுகள், நிதி அன்பளிப்புகள் கட்டுப்படுத்தப்படும்..” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கோட்டேயில் உள்ள...

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான முடிவு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள...

அடுத்த இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு...