follow the truth

follow the truth

January, 7, 2025
HomeTOP1மழையின் மாற்றம் குறித்த வானிலை அறிவிப்பு

மழையின் மாற்றம் குறித்த வானிலை அறிவிப்பு

Published on

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் மழையுடனான வானிலையில் தற்காலிக குறைவை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது கி.மீ. 30-40 வரை பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

TELL IGP மற்றும் l-need சேவைகள் புதிய வடிவில்

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின்...

திரிபோஷ நிறுவனத்தை அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல தீர்மானம் 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கந்தான பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின்...

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை

பாராளுமன்றம் நாளை முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற...