கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள், திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.