எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக சதொச ஊடாக மக்களுக்கு விசேட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(18) இந்த நிவாரண பொதி தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்கள் ஒரு நிறுவனத்தில் 2,751 ரூபாவாகவும், இன்றுமொரு நிறுவனத்தில் 2,489 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், சதொச ஊடாக 1,998 ரூபாவிற்கு விற்பனை செய்கிறோம்.
இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவ்வாறு வீடுகளுக்கு பொருட்களை விநியோகிக்கும்போது சதொசவில் பொருட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட மாட்டது” என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளாா்.
நாளை(20) முதல் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை சதொச நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
இதன்படி, நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்ள 1998 என்ற எண்ணிற்கு அழைக்க முடியும் எனவும், 0115 201 998 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்புவதன் மூலமும் உரிய நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நிவாரணப் பையில் 10 கிலோ சம்பா அரிசி, 2 கிலோ பழுப்பு சர்க்கரை, 1 பாக்கெட் நூடுல்ஸ், 100 கிராம் தேயிலை இலைகள், 250 கிராம் வெண்டைக்காய், 2 சவர்க்காரம் மற்றும் 1 பப்படம் பாக்கட் ஆகியவை அடங்கும்