கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களுடன் பயணித்த பஸ் ஒன்று, பதியத்தலாவ பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைமந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 17 பேர் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 45 பேர் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.