follow the truth

follow the truth

January, 8, 2025
HomeTOP1நீதவான் திலின கமகே இடமாற்றம்

நீதவான் திலின கமகே இடமாற்றம்

Published on

கோட்டை பிரதான நீதவானாக கடமையாற்றிய திலின கமகே இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மொரட்டுவை – மாவட்ட  மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய கொழும்பு பிரதான நீதவானாக கோட்டை பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கல்கிசை நீதவானை நியமிக்க நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூபாய் 8 மில்லியன் இலஞ்சம் தொடர்பான வழக்கை நடத்துவதற்கு மற்றுமொரு நீதவானை நியமிக்குமாறு கோரி திலின கமகே நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த எழுத்துமூல கோரிக்கையை அடுத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே தொடர்பானது.

சலோச்சன கமகே தனது உடன்பிறந்தவர் என்பதால், திலின கமகே, குறித்த வழக்கை தான் விசாரிப்பதில் உள்ள முரண்பாட்டை கோரிக்கைக் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துப்பாக்கிகளைக் கையளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுமெனவும் ஏனைய தேவைகளுக்காக தற்போது துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை...

ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை...

சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான...