follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP12025 வரவுசெலவுத் திட்டம் பெப்ரவரி 17 முன்வைப்பு

2025 வரவுசெலவுத் திட்டம் பெப்ரவரி 17 முன்வைப்பு

Published on

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஜனவரி 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவிருப்பதுடன், இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை 7 நாட்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோழி இறைச்சி விலையில் மாற்றமில்லை

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை...

500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வௌியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக...

ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் இடையே சந்திப்பு?

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது. கடந்த காலப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய...