follow the truth

follow the truth

January, 6, 2025
Homeலைஃப்ஸ்டைல்புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஆயுளில் 20 நிமிடம் குறைகிறதாம்..

புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஆயுளில் 20 நிமிடம் குறைகிறதாம்..

Published on

இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மேற்பார்வையில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. அதில், புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு பாக்கெட்டில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள், பெண்கள் 22 நிமிடங்களை இழக்கிறார்கள்.

நீண்ட கால புகைப்பழக்கம் உடையவர்கள் , தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்றும் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் பொதுவாக அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று UCL இன் ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆராய்ச்சி குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சாரா ஜாக்சன் கூறுகிறார்.

புகைப்பிடிப்பவர்கள், வரும் புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் ஆண்டின் இறுதிவரை புகைபிடிக்காமல் இருந்தால் 50 நாட்கள் வாழ்க்கையை இழப்பதைத் தவிர்க்கலாம் என்றும் இங்கிலாந்து சுகாதாரத் துறை இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி 2025 இல் தங்கள் நாட்டு மக்களை சிகரெட்டை நிறுத்த வலியுறுத்தி உள்ளது

நீண்ட கால சிகரெட் புகைப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வரை இறக்கின்றனர். இது, இங்கிலாந்தில் ஆண்டுக்கு 80,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோய் இறப்புகளில் கால் வாசி சிகரெட் பழக்கத்தால் தான் ஏற்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உருளைக்கிழங்கு இப்படி பச்சையா, முளைக்கட்டி இருந்தா சாப்பிடாதீங்க…

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி என்றால் அது உருளைகிழங்கு என்றே கூறலாம். இதனால் நிறைய பேர் தங்கள் வீடுகளில்...

நெயில் பாலிஷ் விரும்பிகளா நீங்க?

நீளமாக நகம் வளர்த்து, டார்க் கலர்களில் நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட் செய்து கொள்வதுதான் இப்போதைக்கு நக அழகியல்...

2025-ல் இந்த வைரஸ் தொற்று தான் பேரழிவை ஏற்படுத்தப் போகுதாம்..

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நோய்த்தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பெரிய கவலையை உண்டாக்கும். அதுவும் கடந்த 2019...