நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்க சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து கடனுதவி பெறுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அமைச்சரவைக்கும் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, 1400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் இறுதி அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு அமெரிக்க தூதுரகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அரசாங்க தரப்பில் உள்ள சிலரும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பொறுத்தமானது என கூறிவரும் நிலையில், இலங்கை அரசு தொடர்ந்தும் அந்த கோரிக்கையினை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.