follow the truth

follow the truth

January, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Published on

இலங்கை மீனவர்களின் தொழில் வாய்ப்பினை அதிகரித்தல், பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் என்னும் நோக்கில் கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்பினை அதிகரிப்பது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கொரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் மற்றும் இலங்கையின் கொரிய தூதுவர் மியோன் லீ உடன் நேற்று (30) இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் முகாமைத்துவத்திற்காக இரு தரப்பு இணக்கம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுதல் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின் போது ஆர்வம் காட்டப்பட்டது.

இலங்கைக்காக கொரிய நாட்டினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் மற்றும் வலுவான தொடர்புகள் குறித்து அமைச்சர் இதன் போது தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோழி இறைச்சி விலையில் மாற்றமில்லை

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை...

500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வௌியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக...

ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் இடையே சந்திப்பு?

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது. கடந்த காலப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய...