follow the truth

follow the truth

January, 5, 2025
Homeவிளையாட்டுரோஹித் சர்மாவும் ஓய்வு?

ரோஹித் சர்மாவும் ஓய்வு?

Published on

இந்திய அணி கெப்டன் ரோஹித் சர்மா சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.

முன்னதாக உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் ரோஹித் சர்மா எந்தப் போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதன் விளைவாக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதில் மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த கெப்டன் ரோஹித் சர்மா ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியோடு, கெப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு கெப்டன் ரோஹித் சர்மா தனது ஓய்வு பற்றி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து...

இலங்கை அணி 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி சகல...

நியூசிலாந்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி...