follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP2ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை குறித்த அறிக்கை

ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை குறித்த அறிக்கை

Published on

உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று (30) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் (7 கோடி) உயர்ந்துள்ளது . 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் (2024) மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.

மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.

வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் திகதி...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு சஜித் இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார். இலங்கையில்...

சிறி தலதா வழிபாடு – பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆராய ஜனாதிபதி கண்டி நகருக்கு விஜயம்

சிறி தலதா வழிபாடு மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றிரவு(24)...