தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட பிழை காரணமாக மீண்டும் தரையிறங்கியுள்ளது.
விமானத்தில் இருந்த 161 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக தரையிறங்கியதாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று, தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது, அதே மாதிரி விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பயணிகள் உயிரிழந்தனர்.