follow the truth

follow the truth

April, 9, 2025
Homeஉலகம்ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

Published on

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பங்களாதேஷில்ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

பங்களாதேசில் ஹசீனா அரசு கவிழ்ந்ததையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்தச் சூழ்நிலையில் டாக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ஐசிடி) ஹசீனா முன்னாள் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை ஆலோசகர் டோஹி ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறும்போது “ஷேக் ஹசீனா மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவரை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய அரசுக்கு தூதரக ரீதியாக கடிதம் எழுதி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டொமினிகன் குடியரசில் இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி

டொமினிக்கன் குடியரசில் சாந்தோ டொமிங்கோவில் உள்ள பிரபலமான இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79...

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல்...

பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்க மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை எதிர்த்த மொரோக்கோ பெண் (VIDEO)

இப்திஹால் அபு சாத்து (Ibtihal Abu Sattouh) என்பவர் ஒரு தகுந்த மென்பொருள் பொறியியலாளர், தொழில்நுட்பத் துறையில் சிறந்த...