follow the truth

follow the truth

December, 25, 2024
HomeTOP1அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தினை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தினை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

Published on

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

உள்நாட்டு சந்தையில் அரிசித் தட்டுப்பாடு 2025 ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, அந்த காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை ரூ.20 ஆக இருக்கும் போது கூட, முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலைகளில் மாற்றமில்லை

முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முட்டையின் விலை 25...

கடந்த 24 மணிநேரத்தில் 8,747 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம்,...

நாம் நமது உள்ளங்களில் அமைதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் – பிரதமர்

குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை...