பண்டிகை காலத்தை முன்னிட்டு, மேலதிகமாக பல பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (24) முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்டிகைக் காலம் முடியும் வரை தினமும் 50 மேலதிக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
தேவைப்பட்டால் மேலதிக பேருந்துகளை இயக்குமாறு அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் கொழும்புக்கு வருவதற்காக எதிர்வரும் வாரத்தின் திங்கட்கிழமைகளில் பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பண்டிகை காலத்தையொட்டி, சில சிறப்பு ரயில் பயணங்களும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 27ஆம் திகதி இரவு பதுளைக்கு விசேட புகையிரதமும் கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
அத்துடன், டிசம்பர் 28ஆம் திகதி காலை பதுளைக்கு விசேட புகையிரதமும், 29ஆம் திகதி இரவு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் வரை இயக்கப்படும் நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயில் மற்றும் யாழ் தேவி கடுகதி ரயிலுடன் மேலதிக பெட்டிகளை இயக்குவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது.