follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்ஒமிக்ரோனுக்கு மருந்து தயார்!

ஒமிக்ரோனுக்கு மருந்து தயார்!

Published on

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனம் கொரோனா வைரசுக்காக, “பாக்ஸ்லோவிட்” என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறைந்து விடும்.ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், அந்த ஆபத்து 88 சதவீதமாக குறைந்துவிடும் என, பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பரிசோதனைக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2,246 பேருக்கு, இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.இதில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே 28 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.எனினும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த மாத்திரை நல்ல செயல்திறனுடன் இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

“பாக்ஸ்லோவிட்” மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமிக்ரோன் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் நம்புகிறேன் என பைசர் நிறுவன CEO ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...