follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP1ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

Published on

சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளை தினசரி விசாரணை செய்தல், இலஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகம் செய்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சீர்திருத்தம் ஆகியன இந்த விடயங்களில் உள்ளடங்குவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வவுனியாவில் அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல்

கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய...

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை,...

துணைவேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு...