follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP2பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

Published on

எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் ஏதாவது நல்லது செய்யும் போது அதன் எதிர்மறையான பக்கத்தைப் பார்க்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறுகிறார்.

சமுதாயத்தைப் பாதிக்கும் தீய செயல்களைச் செய்தாலும் அதை நல்லது என்று சொல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஜனநாயக உரிமைக்கு அரசாங்கம் ஒருபோதும் வேலி போடாது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், முடிவுகள் வர கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றும், எதையும் விமர்சிக்கும் முன் முடிவுக்காகக் காத்திருப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதற்காக தமது கட்சியினர் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என தெரிவித்த அவர், அவ்வாறானதொரு தேவை ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...

ரூ.98 மில்லியன் மிச்சப்படுத்திய NPP அரசின் SMS செய்தி – அப்பட்டமான பொய் அது இலவச சேவை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை...