அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சில சட்டங்கள் திருத்தம் செய்வதில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தாய்வான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற தாய்வான் நாடாளுமன்ற கூட்டத்தில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை வெளியேற்றுதல், மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மாற்றங்கள் உட்பட சில முக்கிய சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலங்களை அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான கோமிண்டாங் மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் முன்வைத்தன.
இதனால், ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டதால், நிலைமை மோசமடைந்தது.
அரசியலமைப்பு நீதிமன்றத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் தாய்வானின் அரசியலமைப்பு பாதிக்கப்படும் என்றும், அரசியலமைப்பு நீதிபதிகளுக்கு சவாலாக அமையும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.