நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினத்துக்குள் சுமார் 70,000 மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26,000 மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
அத்துடன் உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்களும் போதுமான அளவில் நாட்டரிசியை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சம்பா, கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே நேற்றைய தினம் முடிவடைய இருந்த அரிசி இறக்குமதிக்கான கால எல்லையை அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் நீடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.