சமையல் எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே தெரிவித்துள்ளார்.
எரிவாயு நிறுவனங்கள், தரநிலைகள் பணியக அதிகாரிகள், நுகர்வோர் உட்பட சுமார் 40 தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.