follow the truth

follow the truth

December, 19, 2024
Homeவிளையாட்டு"என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது"

“என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது”

Published on

என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆஸ்திரேலிய செய்தியாளர்களுடன் விராட் கோஹ்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் மூன்று டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தனா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தற்போது மெல்போர்ன் வந்தடைந்தனர்.

விராட் கோஹ்லி தனது குடும்பத்தினருடன் மெல்போர்ன் வந்தடைந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியா செய்தியாளர்கள், விராட் கோஹ்லி குடும்பத்தினரை வீடியோ எடுக்க முற்பட்டனர். அப்போது இதை பார்த்து கடுப்பான விராட் கோஹ்லி, என்னுடைய அனுமதி இன்றி என்னுடைய குடும்பத்தினரை புகைப்படம், வீடியோ எடுக்காதீர்கள்.

எங்களுக்கு கொஞ்சம் பிரைவசி தேவை என்று விராட் கோஹ்லி கோபமாக கூறியுள்ளார். இதனால் அங்கு நின்ற ஆஸ்திரேலியா ஊடக நிபுணர்கள் விராட் கோஹ்லி உடன் கோபமாக பேசியுள்ளனர். இதனை அடுத்து அங்கு இருந்த பெண் செய்தியாளர் ஒருவரிடம் விராட் கோஹ்லி கோபமாக பேசியுள்ளார்.. அப்போது ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் விமான நிலையத்தில் ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிப்பு கேட்டார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விராட் கோஹ்லி கூறிய உடனே ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் புகைப்படம் வீடியோ எடுப்பதை நிறுத்தாதது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விராட் கோஹ்லியை கோபப்படுத்தி அவருடைய கவனத்தை சிதறடிக்க வேண்டும் என்ற பாணியில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் விராட் கோஹ்லியின் மகள் வீடியோ ஒன்று வைரலானது. அப்போது விராட் கோஹ்லி இந்த வீடியோவை உடனே நீக்கி விடுங்கள் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்ததை எடுத்து அது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் வைரல் பதிவு

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்....

நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர்...

ஓய்வை அறிவித்தார் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர்...