follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் 2022ஆம் ஆண்டை நாவலர் ஆண்டாக பிரகடனம்!

இலங்கையில் 2022ஆம் ஆண்டை நாவலர் ஆண்டாக பிரகடனம்!

Published on

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று  அலரி மாளிகையில் நடைபெற்றது.

புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் மு. பத்மவாசனினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்க தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (01) நள்ளிரவு முதல் இந்தக் கட்டணங்கள் 4 வீதத்தால்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...