தெரிவு செய்யப்பபடுகின்ற சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொழிநுட்பத் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில் சுமார் 155,000 சிறுவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால், ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படுகின்ற ரூ.60/- நிதி போதுமானதாக இன்மையால், குறித்த தொகையை 100/- ரூபாவாக அதிகரிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.