follow the truth

follow the truth

December, 19, 2024
HomeTOP2அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்

Published on

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாம் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் அவதூறான விடயங்கள் பரப்பப்பட்டமை, கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட விடயங்களால் தமக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி வைத்தியர் சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த யாழ்.மேலதிக மாவட்ட நீதிபதி அ.ஆனந்தராஜா, வழக்காளிக்கு எதிராக எவ்வித அவதூறான கருத்துகளை தெரிவிக்கக்கூடாதென அறிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க அனுமதி

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

முன்பள்ளி பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி

தெரிவு செய்யப்பபடுகின்ற சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க மகளிர் மற்றும்...

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து உயரிய தரத்திலான மரபணு திறன் கொண்ட கால்நடைகளை இறக்குமதி...