follow the truth

follow the truth

December, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஉகண்டாவில் உள்ள பணத்தை விரைவில் கொண்டுவருவோம்

உகண்டாவில் உள்ள பணத்தை விரைவில் கொண்டுவருவோம்

Published on

ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் பெரிதளவில் பேசப்பட்ட உகண்டாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொடஹெச்சி கருத்து தெரிவித்துள்ளார்.

விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கேள்வி: அரிசி ஒரு கிலோ 270 ரூபா! அப்படித்தானே?
பதில்: ஆம், ஆம்.

கேள்வி: மாற்றம் ஒன்று வருமா?
பதில்:- நிச்சயம் வரும்.

கேள்வி: உகண்டாவுக்கு கொண்டு சென்றதாக சொன்ன அந்த பணம்? கொண்டு வருவீர்களா?

பதில்: நிச்சயம் மிக விரைவில் அதனை நாங்கள் கொண்டு வருவோம்.

ஆனால் இதற்கு முன்னர் தங்கள் தரப்பில் இருந்து அப்படி உகண்டாவுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

அந்த பணம் சட்ட ரீதியாக இலங்கையில் அச்சிடப்பட்ட உகண்டா பணம் எனவும் அக்கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூறியே ஆக வேண்டும்

கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும்...

“நிரூபித்தால் எம்பி பதவியை இராஜினாமா செய்கிறேன்”

சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(18)...

சமிந்திராணி கிரியெல்ல பட்டப்படிப்பு சான்றிதழ்களை முன்வைத்தார்

இன்றைய இலங்கையில் சட்டத்தரணிகளுக்கு உத்தியோகபூர்வ பட்டம் அல்லது சட்டத்தரணி என்ற பட்டம் வழங்கப்படாத ஒரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர்...