follow the truth

follow the truth

December, 19, 2024
Homeஉள்நாடுஅதிவேக வீதியில் வாகன விபத்து - இந்த வருடத்தில் 16 பேர் உயிரிழப்பு

அதிவேக வீதியில் வாகன விபத்து – இந்த வருடத்தில் 16 பேர் உயிரிழப்பு

Published on

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கவனயீனமாகவும் சாரதி களைப்புடனும் வாகனம் செலுத்துகின்றமை இந்த விபத்துக்கள் இடம்பெற பிரதான காரணங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம். குறிப்பாக சாதாரண வீதிகளில் பயணிப்பதை விட நாம் அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வேகத்துடன் பயணிக்கிறோம். இதன்போது விபத்து ஏற்பட்டால் அது பாரதூரமான விபத்தாக மாறலாம். அதேபோன்று உயிர் ஆபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எமது அவசரம் பேராபத்தை விளைவிக்கும்.

எனவே, சாரதிகள் அதி வேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூறியே ஆக வேண்டும்

கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும்...

16,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் இன்று(18) வரையான காலப்பகுதியில் 16,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில்...

பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு – தொகை மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு இன்றையதினம் (18) வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது...