ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.