வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெறுமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாட ஒன்றிணைகின்றனர். 400 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் 25 நாடுகளில் பேசப்படும் அரபு மொழி வெறும் மொழியாக இல்லாமல், கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் அறிவாற்றலின் கோணங்களில் எல்லைகளை கடந்த ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது.
அரபு மொழியின் பாரம்பரியம்
அரபு மொழியானது மனிதரின் அழகிய, அறிவார்ந்த மற்றும் ஆன்மீகமான தகவல்களை பரிமாறும் ஆற்றலின் சான்றாகவும் ஊடகமாகவும் விளங்குகிறது. பண்டைய அரபு கவிதைகளின் கவியரங்குகளிலிருந்து பள்ளிவாசல்கள், கட்டிடங்களின் சுவர்களை அலங்கரிக்கும் சிக்கலான எழுத்தணிகள் வரை, அரபு மொழி பல நூற்றாண்டுகளாக கலைப் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கடத்தும் கப்பலாக இருந்து வருகிறது.
மேலும், அரபு மொழி இஸ்லாமிய பொற்காலத்தில் அறிவியல், தத்துவம், மற்றும் இலக்கியத்தின் பொதுமொழியாக விளங்கி மகத்தான பங்களிப்புகளைச் செய்துள்ளது மறைக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. அல்-பாராபி, இப்னு சினா (அவிசென்னா), மற்றும் அல்-குவாரிஸ்மி போன்ற அறிஞர்கள் மருத்துவம் முதல் கணிதம் வரை பல தரப்பட்ட துறைகளில் நவீன பிற்கால கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டிகளாக அமைந்த அத்தனை படைப்புகளையும் அரபு மொழியிலேயே எழுதியுள்ளனர்.
இந்த செழிப்பு வாய்ந்த அரபு மொழியினை பாதுகாப்பதற்காக சவூதி அரேபிய இராச்சியம் பல் வகையான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இஸ்லாத்தின் பிறப்பிடமாகவும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலராகவும் விளங்கும் சவூதி அரேபியா, அரபு மொழியின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு சாரத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
சில முக்கிய முன்னெடுப்புகள் மூலம், அரபு மொழியை மேம்படுத்துவதில் சவூதி அரேபியா முன்னனியில் திகழ்கிறது:
- மன்னர் சல்மான் உலகளாவிய அரபு மொழி மையம்:
இந்த மையம் அரபு மொழியை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒரு மையமாக செயல்படுகிறது. இது கல்வியியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதோடு, உலகம் முழுவதும் அரபு மொழிக் கற்கைக்கு ஆதரவு அளிக்கிறது, மற்றும் அரபு இலக்கியத்தையும் கலைகளையும் ஊக்குவிக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை வருடாந்தம் நடாத்தி வருகிறது. - இளவரசர் முஹம்மத் பின் சல்மான் திட்டம்:
இந்த மாபெரும் திட்டமானது அரபு மொழி கல்வியினை மேம்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பங்களை, டிஜிட்டல் தளங்களையும், கற்கை முறைகளையும் அறிமுகப்படுத்தி அதற்கான மிகுந்த ஆதரவையும் வழங்கி வருகிறது. இது, அரபு மொழி e-கற்றல் (e-learning) திட்டங்கள் மற்றும் அரபு மொழியை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்காற சிறப்பு மொழிக் கற்கை நெரிகளையும் செயற்படுத்தி வருகிறது. - சர்வதேச பல்கலைக்கழகங்களில் அரபு மொழி துறைக்கான பங்களிப்பு:
சவூதி அரேபியா உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், பீஜிங் பல்கலைக்கழகம் மற்றும் மொஸ்கோ பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக் கழகங்களில் அரபு மொழித் துறையில் ஆய்வுகள் கற்கைகளில் ஈடுபட செல்பவர்களுக்கான புலமைப் பரிசில்களை பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. - அரபு மொழி மற்றும் இலக்கியத்துக்கான மன்னர் பைசல் சர்வதேச பரிசு: அரபு மொழியியல் மற்றும் இலக்கியத்தில் சிறப்புப் பங்களிப்புகளைச் செய்தவர்களை கௌரவிக்கும் முகமாக வழங்கப்படும் இப்பரிசு, அரபு மொழியை கொண்டாடுவதற்கான முக்கிய பங்காக விளங்குகிறது.
- செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப ரீதியான முயற்சிகள்:
செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு கருவிகள் மற்றும் சமூக ஊடக தளங்களில் அரபு மொழியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கிறது. அரபு மொழியானது இந்த டிஜிட்டல் யுகத்தில் அனுகும் வகையிலான மொழியாக மற்றும் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த உலக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
6. கலைக்களஞ்சியங்கள் மற்றும் அரபு மொழிசார் போட்டிகள்:
சவூதி அரேபியா அரபு கவிதை விழாக்கள், அரபு எழுத்தணிப் போட்டிகள் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி அரபு மொழியின் செழுமையை வெளிக்கொணர்கிறது. ரியாத் புத்தக கண்காட்சி மற்றும் ஒகாஸ் சூக் பண்டிகை போன்றவை நிகழ்வுகள் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கின்ற, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்தியம்புவனவாக உள்ளன.
7.அல்-குர்ஆனிய அரபு மொழியை வளர்ப்பதற்கான ஆதரவு:
உலகெங்கும் குர்ஆனை பிரசுரித்தலும், குர்ஆனிய அரபு மொழியை கற்றுக்கொடுக்கும் மையங்களை நிறுவுவதிலும் சவூதி அரேபியா ஒரு தனிச் சான்றாக உள்ளது.
நவீன உலகில் அரபு மொழி
அரபு மொழியானது, ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தொடர்ந்து வளர்ந்து வருகின்றது, இந்த விடயமானது அரபு மொழியின் உலகளாவிய முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைகிறது. நவீன யுகத்தைப் பொருத்த மட்டில், டிஜிட்டல் ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், அரபு மொழியானது தனது பாரம்பரியத்தையும் பாதுகாத்துக்கொண்டு புதிய தொடர்பாடல் முறைகளுக்கும் தகுந்ததாக வடிவமைந்து வந்துள்ளது.
மேலும், அரபு மொழியின் பாதுகாப்பானது, உலகெங்கும் 1.9 பில்லியன் முஸ்லிம்களின் மனதில் எதிரொலிக்கும் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய போதனைகளை புரிந்து கொள்வதற்கு முக்கியமானதாகும். அதன் மொழியியல் ஆழமும் பல்வகைமையும், பல வட்டார மொழிகளையும், நவீன வட்டார அரபியையும் உள்ளடக்கியவை. இந்த பல்வகைத் தன்மை உலகளாவிய தொடர்பாடலையும் கலாச்சார பரிமாற்றத்தையும் செழிக்கச் செய்கின்றன.
சவால்களும் வாய்ப்புகளும்
அரபு மொழியானது அற்புதமான மொழியாக இருந்தாலும் கூட, கல்வியில் மொழியின் ஒரேசமமாக்கல் மற்றும் ஆங்கிலம் போன்ற உலக மொழிகளின் ஆதிக்கம் போன்ற சில சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன.
அரபு மொழி பல சவால்களை எதிர்கொண்டாலும், இவை மேம்பாட்டிற்கான வாய்ப்புகளாக மாறுகின்றன. சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்த மொழியை தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைக்க, அதன் டிஜிட்டல் இருப்பை விரிவாக்க, மற்றும் கல்வியில் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுப்பதனூடாக இம்மொழி தொடர்ந்தும் முன்னேறிவருகின்றது.
ஏன் அரபு மொழியை கொண்டாட வேண்டும்?
உலக அரபு மொழி தினம் என்பது வெறும் மொழியை கொண்டாடுவதல்ல; இது அரபு நாகரிகத்தின் பண்பாட்டு மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தினது கொண்டாட்டமாகும். மனித நாகரிக முன்னேற்றத்தை உருவாக்குவதில் அரபு மொழி வகித்த முக்கிய பங்கு குறித்து உலகுக்கு நினைவூட்டுவதுடன், அரபு மொழியைப் பேசுபவர்களுக்கு பெருமை மற்றும் அடையாள உணர்வை இக்கொண்டாட்டம் ஊட்டுகிறது.
ஒன்றுபட்ட உலகத்திற்கு அரபு மொழி
தொடர்ந்து ஒருங்கிணைந்த உலகில், அரபு மொழி பல்வேறு பண்பாட்டை ஒன்றிணைக்கும் பாலமாக உள்ளது. அதன் கவிதை நயத்துடன் கூடிய தன்மை, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த ஆழம் இதை ஒரு அழிக்க முடியாத மொழியாக்கிறது.
இந்த உலக அரபு மொழி தினத்தில், இந்த காலத்தால் அழியாத மொழியைப் போற்றவும், அதன் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் செயலாற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கவும் நாம் முன் வரவேண்டும். உலக சமூகத்தில் அரபு மொழி, பண்பாடு, நிலைத்தன்மை, மற்றும் ஒற்றுமையின் மையமாக விளங்க நாம் பங்களிக்க வேண்டும்.
எழுத்து- காலித் ரிஸ்வான்