இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி WhatsApp இணைப்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை வழங்குவதாக கூறி இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி இந்த நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக இதுவரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி, இவ்வாறான மோசடியாளர்களிடம் வீழ்ந்து விடவேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பணியகத்தின் குறுகிய தொலைபேசி இலக்கமான 1989 அல்லது 071 759 35 93 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.