ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நேற்று (17ம் திகதி) இரவு 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் குழுவாக கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் அதே விமானத்தில் திரும்பியிருந்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 இல் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதியும் அவரது குழுவினரும் வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.